Tuesday, August 9, 2011

தற்கொலை

தீயிற்கு விலைபேசி
கப்பலில் ஏற்றப்பட்டேன்
நெருப்பிற்கு நீர் மேல் என்று
கப்பலிலிருந்து கடலுக்குள் ,
எனக்கொரு துணையாய்
அவளும் குதிக்க
ஆறாவது வினாடியில்
நீரை அடைந்தோம்
ஆனால் என்ன அவசரமோ
அவள் மூழ்க தொடங்கினாள்
எனக்கு முன்னரே !
தீடிரென்று மனம் மாறிப்போனதோ
வாழ நினைக்கும் அவளின்
உள்ளக்கதறல் வாய்வழியே
அவளுக்கருகினில்
விழுந்ததால்
என்னைப்பற்றி உயிர்மீண்டாள்
அப்பொழுதுதான்
நான் உணர்ந்தேன்
மரமாகிய எனக்கு
மிதக்கும் தன்மை ஒன்று
உண்டென்று !!

No comments:

Post a Comment