எல்லோரும் இனிமையானவர்கள் தான்
அவர்களை நேற்று பார்த்திராத கோணத்தில் இன்று பார்த்தால்
--இம்மானுவேல்
உங்களுக்கு பிடித்த ஒன்று கிடைக்காத போதுதான் அதன் மீதான ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது .இது ஏன் என்றால் ஒரு ஆசையின் நிறைவு அதில் முழுமைபெறவில்லை இந்த முழுமை பெறாத ஆசை மரணம் வரை ஏக்கமாக உள்ளத்தின் ஆழத்தில் அமர்ந்துகொண்டு கண் மூடும் நிமிடம் வரை அடிக்கடி மனதின் மேல்பகுதிக்கு வந்து செல்கிறது .
இதனை மனப்பக்குவதின் மூலம் அந்த ஏக்கத்தை மாற்றமுடியும்! அதை எவ்வாறு செய்வது ? இப்படித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தேவையுள்ளவை ,தேவையற்றவை என இருவிஷயங்கள் உண்டு. அதில் இந்த நிறைவேறாத ஆசைக்கான காரணியை (பொருள்,புகழ் ,வாய்ப்பு ,மனிதர்கள் ....)
உங்களின் தேவையற்றவைகளின் வரிசையில் சேர்த்துவிடுங்கள் .இது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல மூன்றுமாத காலத்தில் முறையான பயிற்சி மூலம்
இதனை செய்யமுடியும் .
ஏனெனில் ஒரேநாளில் பல நாட்களாக நினைத்து நினைத்து கொண்டிருந்த ஏக்கத்தை மாற்ற முடியாது .இது முடியும் என்பதிற்கு சான்று
இன்றுவரை அந்த கிடைக்காத பொருளுக்காய் நீங்கள் துவண்டு பொய் அமர்ந்ததில்லை இன்றும் உங்கள் வாழ்க்கையின் ஓட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .