Tuesday, August 9, 2011

பாரதியின் மீசை

அச்சங்களுக்க்காகவும்
கூச்சங்களுக்க்காகவும்
நீ பாதைகளை
மாற்றிக்கொண்டது போதும்
இனி உனக்காக
அவைகள் தங்கள்
பாதைகளை மாற்றிக்கொள்ள
எழுந்து நில் !

மூடங்களும் கடவுள்களும்
முடிவிரித்து பயம் கொளுத்தியது போதும்
பட்டறிவும் பகுத்தறிவும்
இனி உன்னில் காட்டுத்தீயாய் பரவிட
விழித்து நில் !

தோல்விகளும் அவமானங்களும்
புட்டிப்பால் குடித்தவர்க்காம்
வீரமிகு தாய்ப்பாலின்
வலிமை காட்டி வாகை சூட
பாரதியின் மீசை போல்
உயர்ந்து நில் !


மாற்றங்கள் தரும் வெற்றிகள்
இனி உன் வழியிலே ........

No comments:

Post a Comment