Friday, October 26, 2012


108
------------------------------------------------

காலனை துரத்த காற்றாய்,
கண்ணீரை துடைக்க தோழனாய்,
கருமம் தீர்க்க கடவுளாய் ,

எங்கிருந்தாலும் வருவான் அவன் !!

மனிதர் உயர் நிலை தாழ்நிலை பார்ப்பதில்லை 
சாதியையும் மதமும் அவனை எதிர்ப்பதில்லை 

விபத்தோ? தீயோ ?குற்றங்களோ?!
நண்பனோ ? பகைவனோ ?அயலானோ ?

தயக்கமின்றியே அழைத்திடுங்கள் ,
ஒரு உயிரின் பிரிவை தடுத்திடுங்கள் !

அழைத்த உடனே! அன்னையை போல் 
வேகமாய் வந்தே உதவிடுவான் |

அழைக்கும் வாய்ப்பில்லைஎன்றாலும் 
வழியில் எங்கேனும் ஒலிகொண்டு வழி கேட்டால் 
சற்றே ஓரமாய் ஒதுங்கி
வழி கொடுங்கள் .

யாரறிவார்  அந்த சில நொடிகள் கூட 
பல உயிர்களை காக்கலாம் ?

                                                   இம்மானுவேல் .ம 
                                                   கோவை