Tuesday, August 9, 2011

நெளிவுகள்

கோடிக்கணக்கான வருடங்களில்
லட்சக்கணக்கான
நாகரீகங்கள் என்னும் முகச்சாயங்களை
பூசிக்கொண்டு வரும்
இந்த பூலோக உருண்டையின்
முதுமை வரைவுகள் ,
கடற்கரை ஓரங்களில்
தன் முகம் கழுவும்போது
மணல் நெளிவுகளால்
அப்பட்டமே !

No comments:

Post a Comment