கட்டுரைகள்

ஒரு அணு ,ஒரு மனிதன் ஒரு பூமி ஒரு பொருள் போன்ற உருவமுள்ளவைகளும்உருவமற்றவைகளும் என ஒவ்வொன்றிற்கும் பெயர் என்று ஒன்று உள்ளதாலேஅது இருப்பதாக தெரிகிறது .
     அனைத்துக்கும் பெயரிட்டவன் மனிதன் .அதே போல் ஒரு வலி ,ஒரு மூச்சு ஒரு இசை ஒரு துன்பம் ஒரு சிரிப்பு எனஒவ்வொன்றும் நகர்கிறது காலத்தில் அது இடப்பெர்யர்ச்சி அடைவதால் தான்ஒரு சுகம்,மரணம்,அமைதி ,இன்பம் என்பவைகள் நகர்ந்த இடத்தை நிரப்பிகின்றனஒரு தொடர்ச்சியான இடப்பெயர்ச்சிதான் காலம்இந்த காலம் தான்அனைத்தையும் உருவாக்குகிறது அப்படிஎன்றால் கடவுள் என்பது யாது ? காலம் தான் கடவுளோ ?  ஏற்றுக்கொள்ள கடினம்தான் .அது நகர்வதாலே அனைத்தும் ஏற்படுகிறதென்றால் அதனை நகர்த்துவது யார் ?.நிகழ்த்துவது யார்.?
                      யாரும் எதுவும் அன்றியே சுற்றுகிற இந்த பூமி இத்தனை வருடங்களாய் ஒரே வேகத்தில் சுற்றுவது எப்படி ?
தெரிந்த ஒன்பது கோள்களில் வசிக்காத மனிதனும் மற்ற உயிர்களும்  இங்கு மட்டும் ஆக்சிஜன் உதவியோடு வாழ்கின்றன .ஆச்சர்யம்தான் .

                       ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டென்றால் ? கால நகர்வின் எதிர் வினை எது ? ஒரு மரணம் ஒரு மனிதனுடைய காலத்தை முடிவிற்கு கொண்டுவரும் என்றால். காலத்தை ஒவ்வொரு மனிதனுக்குமாய் பிரித்துக்கொள்ளலாம் .காலம் பிரிபடும் ,கடவுளும் பிரிபடுவார் தனித்தனியாய் .

             ஒவ்வொன்றும் முடிவுக்கு உட்படுவதேன்றால் காலமும் முடிவுக்கு வருமா?  கடவுளும் முடிவுக்கு வருவாரா ?
அனைத்தும் முற்றுபெற்றுவிட்டால் இறுதியில் என்னதான் இருக்கும் .தொடக்கத்தில் என்ன இருந்திருக்கும் ?