108
------------------------------------------------
காலனை துரத்த காற்றாய்,
கண்ணீரை துடைக்க தோழனாய்,
கருமம் தீர்க்க கடவுளாய் ,
எங்கிருந்தாலும் வருவான் அவன் !!
மனிதர் உயர் நிலை தாழ்நிலை பார்ப்பதில்லை
சாதியையும் மதமும் அவனை எதிர்ப்பதில்லை
விபத்தோ? தீயோ ?குற்றங்களோ?!
நண்பனோ ? பகைவனோ ?அயலானோ ?
தயக்கமின்றியே அழைத்திடுங்கள் ,
ஒரு உயிரின் பிரிவை தடுத்திடுங்கள் !
அழைத்த உடனே! அன்னையை போல்
வேகமாய் வந்தே உதவிடுவான் |
அழைக்கும் வாய்ப்பில்லைஎன்றாலும்
வழியில் எங்கேனும் ஒலிகொண்டு வழி கேட்டால்
சற்றே ஓரமாய் ஒதுங்கி
வழி கொடுங்கள் .
யாரறிவார் அந்த சில நொடிகள் கூட
பல உயிர்களை காக்கலாம் ?
இம்மானுவேல் .ம
கோவை

Tamil Kavithaikal, Tamil Poems, Festival Kavithaikal, Natural Kavithaikal. Find More Category Kavithaikal Pls Visit.http://www.valaitamil.com/literature_poem
ReplyDelete